'பிக் டேட்டா' படிப்புகள் என்றால் என்ன? வேலை வாய்ப்புகள் இருக்கிறதா? முழு விவரம்


பிக் டேட்டா படிப்புகள் என்றால் என்ன? வேலை வாய்ப்புகள் இருக்கிறதா? முழு விவரம்
x
தினத்தந்தி 9 Sept 2024 8:51 AM IST (Updated: 9 Sept 2024 10:49 AM IST)
t-max-icont-min-icon

"பிக் டேட்டா" சம்பந்தப்பட்ட படிப்புகள், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்பும் அத்தனை பேருக்கும் உதவியாக அமைகிறது.

"பிக் டேட்டா " (BIG DATA) என்பது ஒரு தொழில்நுட்பம் அல்ல. மிகப்பெரிய அளவில் சேகரிக்கப்பட்ட தரவுகளை, தகவல்களை பகுத்தாய்வு (ANALYSIS ) செய்வதற்கு உதவியாக அமைந்து, சிறந்த முடிவுகளை ( DECISIONS ) எடுப்பதற்கு உதவும் செயல்பாடுகளைக் குறிக்கும்.

இப்போதெல்லாம், மிகவும் தேவையான ஒன்றாக "பிக் டேட்டா" (BIG DATA) கருதப்படுகிறது.

நாளுக்குநாள் தகவல்கள் எல்லா இடங்களிலும் அதிகமாகி விட்டன. அதனால், அந்த தகவல்களை முறைப்படி சேகரித்து, தரவுகளாக மாற்றி, சரியான முறையில் பகுப்பாய்வு செய்வது நல்ல முடிவுகளை எடுக்க உதவுகிறது. எனவேதான், தரவுகளை முடிவுகளாக மாற்றும் பணியில் இந்த "பிக் டேட்டா "மிகப்பெரிய அடித்தளமாக கருதப்படுகிறது.

பிக் டேட்டா "படிப்புகள்

"பிக் டேட்டா "(BIG DATA) தொடர்பான பணிகளில் சேர்வதற்கு சில படிப்புகளும், சில ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளும் மிகவும் உதவியாக அமைகின்றன. அவற்றுள் சில..

1.கூகுள் டேட்டா அனலிட்டிக்ஸ் புரெபசனல் சர்டிபிகேட்

2.ஸ்பார்க் மற்றும் ஹடூப் (IBM) பிக் டேட்டா அறிமுகம்

3. டேட்டா அனலிட்டிக்ஸ் அறிமுகம் (IBM)

4.பிக் டேட்டா மாடலிங் மற்றும் மேலாண்மை அமைப்புகள்

5. பிக்டேட்டா ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்கம்

6. பிக் டேட்டாவுடன் கூடிய இயந்திர கற்றல்

7.பிக் டேட்டா - கிராஃப் அனலிட்டிக்ஸ்

8.பிக் டேட்டா- கேப்ஸ்டோன் திட்டம்

9.தரவு ஆய்வாளர்கள் நிபுணத்துவத்திற்கான டேட்டாபிரிக்குகளுடன் கூடிய தரவு அறிவியல்

10.தரவு பகுப்பாய்வு மற்றும் வழங்கல் திறன்: PwC அணுகுமுறை சிறப்பு

11. கணக்கியல் தரவு பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தல் அறிமுகம்

12.தரவு அறிவியல் பட்டதாரி சான்றிதழ்

13. டேட்டா அனலடிக்ஸ் : வணிக பயன்பாடுகள் மற்றும் மூலோபாய முடிவுகள்)

14. பிக் டேட்டா ஹடூப் சொல்யூஷன்ஸ் ஆர்கிடெக்ட் மாஸ்டர்ஸ் புரோகிராம்

15.எம்பிஏ பிக் டேட்டா மேனேஜ்மென்ட்

16.பிக் டேட்டா ஆர்கிடெக்ட் மாஸ்டர்ஸ் புரோகிராம்

17. பிக் டேட்டா மற்றும் ஹடூப் டிப்ளோமா திட்டம்

18.பிஜி டிப்ளமோ இன் பிக் டேட்டா அனலிட்டிக்ஸ் (பிஜி-டிபிடிஏ)

யாருக்கு உதவும்?

"பிக் டேட்டா" (BIG DATA) சம்பந்தப்பட்ட படிப்புகள், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்பும் அத்தனை பேருக்கும் உதவியாக அமைகிறது.

குறிப்பாக,,தரவுகளை கையாளுதல் (HANDLING), டேட்டாக்களை பிராசஸ் செய்தல் (PROCESSING), டேட்டாக்களை பகுப்பாய்வு செய்தல் (ANALYSING), டேட்டாக்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் உருவாகும் என்பதை கணித்தல் (VISUALISATION) போன்ற பல முக்கியமான நுணுக்கங்களை டேட்டா சர்டிபிகேஷன் ப்ரோக்ராம் (DATA CERTIFICATION PROGRAM) மூலம் தெரிந்து கொள்ளலாம்.

டேட்டா அனலிஸ்ட் (DATA ANALYST ), டேட்டா சயின்டிஸ்ட் (DATA SCIENTISTS), டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் (DATA BASE ADMINISTRATORS ), மற்றும் ஐடி ஸ்பெசலிஸ்ட் (IT SPECIALISTS ) போன்றவர்களுக்கு இந்த படிப்பு மிகவும் அவசியமாகும்.

வேலைவாய்ப்பு எங்கே?

டேட்டா சர்டிபிகேஷன் ப்ரோக்ராம் (DATA CERTIFICATION PROGRAM) என்னும் படிப்பை முடித்தவர்களுக்கு வங்கிகள் (BANKING), ஈ காமர்ஸ் (E-COMMERCE ), ஹெல்த் கேர் (HEALTH CARE ), சோசியல் மீடியா ( SOCIAL MEDIA ) போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அமேசான் ( AMAZON ), கூகுள் (GOOGLE ), நெட் ஃப்லிக்ஸ் (NETFLIX) ஆக்சன்ச்சர் (ACCENTURE ), மைக்ரோசாப்ட் ( MICROSOFT ), ஐபிஎம் (IBM ) போன்ற நிறுவனங்கள் இந்த படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குகின்றன.

பதவி உயர்வு எப்படி?

ஆரம்பத்தில் டேட்டா சர்டிபிகேஷன் ப்ரோக்ராம் முடித்தவர்களுக்கு டேட்டா அனலிஸ்ட் ( DATA ANALYST ) அல்லது டேட்டா இன்ஜினியர் ( DATA ENGINEER ) போன்ற பதவிகள் வழங்கப்படும். அதன்பின்னர், மிக முக்கியமான பொறுப்புகள் அனுபவத்தின் அடிப்படையிலும் ,திறமையின் அடிப்படையிலும் வழங்கப்படுகிறது. டேட்டா ஆர்க்கிடெக்ட் (DATA ARCHITECT), டைரக்டர் ஆப் டேட்டா சயின்ஸ் (DIRECTOR OF DATA SCIENCE ) சீப் டேட்டா ஆபிஸர் ( CHIEF DATA OFFICER ) போன்ற உயர் பதவிகளும் பெற வாய்ப்புகள் உள்ளது.

பணி அனுபவம் ,கல்வித் தகுதி, நிறுவனத்தில் பணி திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பிக் டேட்டா தொடர்புடைய பணியாளர்களுக்கு மிக சிறந்த பதவிகள் வழங்கவும் நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

கல்வித் தகுதி என்ன?

சமீப காலங்களில் மிகவும் பிரபலமடைந்த பிக் டேட்டா சர்டிபிகேஷன் ப்ரோக்ராம் படிப்பில் சேர பலரும் ஆர்வமாக இருந்தாலும், சில குறிப்பிட்ட பட்டப்படிப்புகளை படித்தவர்கள் மட்டுமே இந்த துறையில் சிறந்து விளங்கலாம்.

பட்டப் படிப்பில் அல்லது பட்ட மேற்படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ( COMPUTER SCIENCE ), கணிதம் ( MATHEMATICS ), புள்ளியியல்( STATISTICS ) போன்ற பாடங்களை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து படித்தவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து எளிதில் வெற்றி பெற்று சிறந்த பணிகள் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேலும், கம்ப்யூட்டர் சார்ந்த துறைகளில் போதிய முன் அனுபவமும் (WORK EXPERIENCE ) கண்டிப்பாக தேவை.

ப்ரோக்ராம் லாங்குவேஜஸ் (PROGRAM LANGUAGES) போன்றவற்றில் தேவையான அறிவும், பயிற்சியும் தேவை. குறிப்பாக, பைத்தான் (PHYTHON ) ஆர் ( R ), மற்றும் எஸ் கியூ எல் (SQL) , போன்றவற்றில் அனுபவம் பெற்றவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படித்து சிறப்பு பெறலாம்.

பணியின் சிறப்பும், பொறுப்பும்

பிக் டேட்டா பிரிவில் பணியாற்றுபவர்கள் கண்டிப்பாக மிக முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், பல்வேறு முடிவுகள் தரவுகளின் (DATA ) அடிப்படையில் எடுக்கப்படுவதால், அந்த தரவுகள் எனப்படும் டேட்டா சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பிக் டேட்டா சொல்யூஷன்ஸ் ( BIG DATA SOLUTIONS ), மானிட்டரிங் பிக் டேட்டா வால்யூம்ஸ் (MONITORING BIG DATA VOLUMES ) அனலைசிங் பிக் டேட்டா வால்யூம்ஸ் ( ANALYSING BIG DATA VOLUMES ), வழிமுறைகள் மற்றும் அமைப்புகள் , தீர்வுகள் ஆகியவற்றிலும் அதிக கவனம் செலுத்தி சிறந்த முடிவுகள் எடுக்க எடுக்க வேண்டும்.

பிக் டேட்டா ஸ்பெஷலிஸ்ட் (BIG DATA SPECIALIST ) என்னும் பதவி வைப்பவர்கள் ,கண்டிப்பாக மற்ற துறைகளோடு இணைந்து தகவல்களையும் தரவுகளையும் பகுப்பாய்வு செய்து, பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு காண்பவர்களாக திகழ வேண்டும்.




Next Story