தபால் துறையில் 44,228 காலி பணியிடங்கள்: விரைவில் ரிசல்ட்
10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தியா முழுவதும் அஞ்சல் துறையில் காலியாக உள்ள 44,228 கிராம அலுவலக சேவை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 3,789 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 5-ம் தேதி வரை பெறப்பட்டன.
இந்த பதவிகளுக்கு தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 10-ம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடம் கொண்டு படித்திருக்க வேண்டும். மேலும், கணினி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு வகுப்பினருக்கு நிர்ணயிக்கப்பட்டபடி வயது தளர்வுகள் வழங்கப்படும். எஸ்.சி. பிரிவினருக்கு 5 வருடங்கள், எஸ்.டி. பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரிவுக்கு ஏற்ப 10 முதல் 15 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.
விண்ணப்பிக்கும் காலக்கெடு நிறைவடைந்த நிலையில், விண்ணப்பங்களை சரிபார்த்து விண்ணப்பதாரர்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தொகுக்கப்படும்.
இந்நிலையில், கிராமின் டக் சேவக் (GDS) கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டாக் சேவக் பதவிக்களுக்கான ஆட்சேர்ப்பு முடிவுகள், அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://indiapostgdsonline.gov.in/) விரைவில் வெளியாகவுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து தரவரிசை பட்டியலை பார்க்கலாம்.
செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi