அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் வேலை: யார் விண்ணப்பிக்கலாம்?


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் வேலை: யார் விண்ணப்பிக்கலாம்?
x
தினத்தந்தி 10 Jan 2025 4:41 PM IST (Updated: 10 Jan 2025 4:45 PM IST)
t-max-icont-min-icon

ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 78 செவிலியர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: செவிலியர்

காலியிடங்கள்: 78

வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: செவிலியர் பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பணி முற்றிலும் தற்காலிகமானது. பணியில் சேருவதர்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட வேண்டும். பணி நிரந்தரம் செய்யப்படாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https:// Tiruvallur.nic.in என்ற திருவள்ளூர் மாவட்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயற் செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 545. ஆசூரி தெரு, திருவள்ளூர் மாவட்டம் 602001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 31.1.2025

மேலும் முழுமையான விவரங்கள் அறிய


Next Story