இஸ்ரேலிய, பாலஸ்தீன பிரச்சினை: அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து


இஸ்ரேலிய, பாலஸ்தீன பிரச்சினை: அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து
x

image courtesy : afp

இஸ்ரேலிய, பாலஸ்தீன பிரச்சினை காரணமாக அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

துபாய்,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய படைகள் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்த தாக்குதல் அரபு நாடுகள் மற்றும் உலக மக்கள் மத்தியில் மிகவும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருவதால் துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. துபாயில் வருகிற 25-ந் தேதி நடக்க இருந்த அரேபிய ஆடை அலங்கார விருது வழங்கும் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி மற்றும் துபாய் காமெடி நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.


Next Story