இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை: துபாய்-இஸ்ரேல் இடையே எமிரேட்ஸ் விமான சேவை அடுத்த மாதம் 14-ந் தேதி வரை ரத்து


இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை: துபாய்-இஸ்ரேல் இடையே எமிரேட்ஸ் விமான சேவை அடுத்த மாதம் 14-ந் தேதி வரை ரத்து
x

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை காரணமாக துபாய்-இஸ்ரேல் இடையே எமிரேட்ஸ் விமான சேவை அடுத்த மாதம் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.

துபாய்,

எமிரேட்ஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்துக்கு எமிரேட்ஸ் விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. இந்த விமான சேவை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் போர் காரணமாக அக்டோபர் 20-ந் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து இருந்து வரும் பதற்றம் காரணமாக இந்த தடை அக்டோபர் 26-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த தடை அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு இருந்து வரும் சூழ்நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் தங்களின் விமான டிக்கெட்டை வேறு நாட்களுக்கு மாற்றிக் கொள்ள எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரத்துக்கு இயக்கப்பட்டு வரும் பிளை துபாய் விமான நிறுவனம் தினசரி 4 சேவைகளை இரண்டாக குறைத்துள்ளது. அபுதாபியில் இருந்து இஸ்ரேலுக்கு இயக்கப்பட்டு வரும் எதிகாத் விமான சேவை வழக்கம் போல் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.


Next Story