சார்ஜாவில், 4 ஆயிரத்து 981 புதிய நிறுவனங்கள் பதிவு


சார்ஜாவில், 4 ஆயிரத்து 981 புதிய நிறுவனங்கள் பதிவு
x
தினத்தந்தி 23 Oct 2023 12:30 AM IST (Updated: 23 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சார்ஜாவில் நடப்பு ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 981 புதிய நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில் சபை கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்த சபையின் தலைவர் அப்துல்லா சுல்தான் அல் ஓவைசிஸ் கூறியதாவது:-

சார்ஜா,

சார்ஜாவில் நடப்பு ஆண்டில் செய்யப்பட்டுள்ள புதிய முயற்சிகள் மற்றும் சாதனைகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதில் குறிப்பாக சார்ஜா வர்த்தகம் மற்றும் தொழில் சபை சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மற்றும் முதலீடுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் முடிவில் தற்போது சார்ஜாவில் புதிதாக 4 ஆயிரத்து 981 நிறுவனங்கள் பதிவு செய்து தங்கள் செயல்பாடுகளை தொடங்கி உள்ளன. இத்துடன் வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் பிரதான கிளைகளான அல் தாயித், கோர்பக்கான், டிப்பா அல் ஹிசன் மற்றும் கல்பா ஆகியவைகள் உள்பட மொத்தம் 45 ஆயிரத்து 373 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களின் தொழில் நிறுவனங்கள் மூலம் மொத்த ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி ஆகியவைகளின் மதிப்பு 3-வது காலாண்டில் 1,700 கோடி திர்ஹாமை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் 40 ஆயிரத்து 392 நிறுவனங்கள் தங்கள் உரிமங்களை புதுப்பித்துள்ளது. மேலும் புதிதாக 1,674 சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் புதிய நிறுவனங்களின் வருகை சார்ஜாவின் வளமான முதலீட்டு சூழல், தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான சிறந்த இடமாக இருப்பதை பிரதிபலிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story