`நிலைத்தன்மையான எதிர்காலத்தை உருவாக்குவது தொலைநோக்கு பார்வையில் முக்கிய தூணாகும்'; ராசல் கைமா ஆட்சியாளர் பேச்சு


`நிலைத்தன்மையான எதிர்காலத்தை உருவாக்குவது தொலைநோக்கு பார்வையில் முக்கிய தூணாகும்; ராசல் கைமா ஆட்சியாளர் பேச்சு
x
தினத்தந்தி 23 Oct 2023 12:30 AM IST (Updated: 23 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

`நிலைத்தன்மையான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்து ராசல்கைமா ஆட்சியாளர் பேசியுள்ளார்.

ராசல் கைமா,

ராசல் கைமாவில் உள்ள சகர் பின் முகம்மது சிட்டி பகுதியில் உள்ள அரண்மனையில் ஆட்சியாளர் மேதகு ஷேக் சவுத் பின் சகர் அல் காசிமியை உலக பொருளாதார பேரவையின் அதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்களுடன் உரையாடிய ராசல் கைமா ஆட்சியாளர் பேசியதாவது:-

எதிர்காலத்தின் அம்சங்கள் மற்றும் திசைகளை வடிவமைத்து தேசிய மற்றும் உலகளாவிய முயற்சிகளில் பங்கேற்க நாங்கள் ஆர்வம் காட்டி வருகிறோம். அதேபோல் நிலைத்தன்மை வாய்ந்த வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் வாய்ப்புகளை உருவாக்க தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்துகிறோம். இதன் மூலம் மாறுபட்ட துடிப்பான ஒரு பொருளாதாரத்தை உருவாக்க தொடர்ந்து பணியாற்ற ஆர்வத்துடன் உள்ளோம்.

தேசிய வருமானம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பல்வேறு வளங்கள் தேசத்தின் மக்களுக்கும், இதனை நம்பி வாழ்பவர்களுக்கும் நிலைத்தன்மை வாய்ந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். அமீரகத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நல்ல வசிப்பிடத்தையும், எதிர்காலத்தையும் ஏற்படுத்தி தருவதற்கு விரிவான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ராசல் கைமாவின் தொலைநோக்கு பார்வையில் நிலைத்தன்மை வாய்ந்த எதிர்காலத்தை உருவாக்குவது முக்கிய தூணாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பில் அவருடன் முதலீடு மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இயக்குனர்கள், வாரிய தலைவர் ஷேக்கா அம்னா பிந்த் சவுத் பின் சகர் அல் காசிமி மற்றும் அரசுத்துறைகளின் உயர் அதிகாரிகள் இருந்தனர்.


Next Story