அமீரகத்தை சுற்றி
அமீரகத்தை சுற்றி உள்ள செய்திகள்.
1அபுதாபி
* அமீரக பொருளாதாரத்துறை மந்திரி அப்துல்லா பின் துக் அல் மர்ரி கூறியதாவது, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஒரே மாதிரியான சுற்றுலா விசாக்களை வழங்குவதற்கு அந்த நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு (2024) தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும். இந்த விசாவின் மூலம் 30 நாட்கள் தங்க முடியும் என கூறினார்.
துபாய்
* துபாய் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், துபாயில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் இந்த (2023-24) கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்து 65 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டைவிட 12 சதவீதம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
* துபாய் முகம்மது பின் ராஷித் நூலக அறக்கட்டளை, துபாய் கலாசாரம் மற்றும் கலை ஆணையம் இணைந்து 2-வது ஆண்டாக டிஜிட்டல் பதிப்பு பேரவை தொடர்பான கருத்தரங்கை இன்று (புதன்கிழமை) நடத்துகிறது.
சார்ஜா
* சார்ஜா எக்ஸ்போ சென்டரில் 19-வது சர்வதேச கல்வி கண்காட்சி கடந்த 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 4 நாட்கள் நடந்தது. இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, இங்கிலாந்து, மலேசியா, சைப்ரஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதனை 25 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர்.
அஜ்மான்
* அஜ்மான் வர்த்தக சபையின் பொது இயக்குனர் சலேம் அல் சுவைதி மற்றும் தாய்லாந்து வர்த்தக குழு தலைவர் டாக்டர் வான்விபுத் சன்பசிட்வாங் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இரு தரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக சந்தித்து பேசினர்.
ராசல் கைமா
* ராசல் கைமா போலீசின் தலைவர் அலி அப்துல்லா பின் அல்வான் அல் நுயைமி மற்றும் எதிகாத் ரயில் சேவை செயல் இயக்குனர் டாக்டர் காலித் அகமது பின் பைசல் அல் செக்கி ஆகியோர் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இரு தரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.