அமீரகத்தை சுற்றி


அமீரகத்தை சுற்றி
x

அமீரகத்தை சுற்றி உள்ள செய்திகள்.

அபுதாபி

* அமீரக வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யானுடன் ரொமனியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி லுமினிதா ஒடெபெஸ்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

* அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் 4 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் 20-ந் தேதி முதல் மீண்டும் தனது சேவையை தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

துபாய்

* துபாய் ஜுமைரா பகுதி வணிக வளாகத்தில் உள்ள புத்தக நிறுவனத்தில் அமீரக இலக்கிய அறக்கட்டளையின் சார்பில் மாதாந்திர நூலாய்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அஞ்சல் மல்கோத்ரா என்ற எழுத்தாளரின் `தி புக் ஆப் எவர்லாஸ்டிங் திங்ஸ்' என்ற ஆங்கில நாவல் குறித்து பங்கேற்றவர்கள் விமர்சன உரை நிகழ்த்தினர்.

* இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் போர் காரணமாக துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் விமான நிலையத்துக்கு இயக்கப்பட்டு வரும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் வருகிற 26-ம் தேதி வரை தனது அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

சார்ஜா

* சார்ஜா எக்ஸ்போ சென்டரில் 25-வது தேசிய வேலைவாய்ப்பு கண்காட்சி சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமியின் வழிகாட்டுதலின்படி நடந்தது. இந்த கண்காட்சியில் அமீரக பாதுகாப்புத்துறை அமைச்சகம், சார்ஜா இஸ்லாமிய வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், முக்கிய வங்கிகள் பங்கேற்றன.

அஜ்மான்

* அஜ்மான் பல்கலைக்கழகம் அரபு பிராந்தியத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 22-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட 5 புள்ளிகள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கரிம் செகிர் கூறும்போது, அஜ்மான் பகுதியில் உயர் கல்வி வழங்குவதில் இந்த பல்கலைக்கழகம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.


Next Story