150 பேரிடம் புனித ஹஜ் பயணத்திற்கு முன்பணம் பெற்று மோசடி: இந்திய நபர் கைது
இந்திய நபர் கைது செய்யப்பட்டார்.
சார்ஜா,
சார்ஜாவில் இந்தியாவை சேர்ந்த சாபின் ராஷித் (வயது 44) என்ற நபர் சொந்தமாக சுற்றுலா ஏஜென்சி நடத்தி வருகிறார். இவர் புனித ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி 150 பேரிடம் பணம் பெற்றுள்ளார். ஆனால் அவர் உறுதியளித்தபடி ஹஜ் பயணத்திற்கான எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்க தொடங்கினர். கடைசி நேரத்தில் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது என சாக்கு போக்குகளை சாபின் ராஷித் கூறி வந்தார். ஆனால் பயணம் மற்றும் உணவு, தங்குவதற்காக பெற்ற பணத்தை திருப்பி தரவில்லை. இதில் துபாயில் இருந்து பலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்தனர். 150-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல லட்சம் திர்ஹாம் பெற்று திருப்பி தராததால் அவர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.