இணைய இணைப்பு பெறும்போது கவனிக்க வேண்டியவை


இணைய இணைப்பு பெறும்போது கவனிக்க வேண்டியவை
x
தினத்தந்தி 18 Sept 2022 7:00 AM IST (Updated: 18 Sept 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

ரவுட்டர் வாங்கும்போது, குறைந்தபட்சம் 1 யூ.எஸ்.பி, போர்ட் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். யூ.எஸ்.பி, போர்ட் இருந்தால் தனியாக டாங்கில்-ஐ இணைத்தும் வை-பை இணைப்பை பெறலாம். மேலும் அதிகமாக ஆண்டெனாக்கள் இருக்கும் ரவுட்டரைத் தேர்ந்தெடுத்தால் சிறந்த வை-பை அனுபவத்தை பெற முடியும்.

ல்வி, வேலை, தொழில் போன்ற பல்வேறு தேவைகளுக்காக வீட்டில் இன்டர்நெட் வசதியை அமைத்துக் கொள்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொலைபேசி இணைப்பு மூலமாக இணைய வசதியைப் பெற்றுவந்தோம். ஆனால், தற்போது பலவிதமான தொகுப்புகள் மற்றும் வசதிகள் வந்துவிட்ட நிலையில், எந்த இணைப்பை தேர்வு செய்வது, எந்த ேவகத்தில் இணைப்பு வாங்குவது, வயர் இணைப்பு உள்ளது மற்றும் இல்லாதது, இவற்றில் எந்த இணைப்பு சிறந்தது போன்ற அடிப்படை சந்தேகங்களுடன் பல வகையான கேள்விகளும் நமக்குள் எழும். அதற்கான வழிகாட்டுதல் இங்கே…

வை-பை இணைப்பில் முக்கியமாக கவனத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டியது ரவுட்டர். இது பொருத்தமானதாக இல்லையென்றால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.

டெலிபோன் மூலம் இணைப்பு வாங்கும்போது ஏ.டி.எஸ்.எல், ரவுட்டரையும், மற்றவற்றிற்கு அது அல்லாத மற்ற ரவுட்டரையும் பயன்படுத்துவது நல்லது. மேலும் 'என்' (n) வகை ரவுட்டருக்குப்பதிலாக 'ஏ,சி,' வகை 802.11ஏ,சி, ரவுட்டர் பயன்படுத்துவது சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.

இணையதள தொகுப்பில் உங்கள் தேவைக்கு ஏற்ற திட்டத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. உதாரணமாக, டாக்குமெண்ட் கையாளும் வேலைக்கு அதிக ஸ்பீடு தேவைப்படாது. ஆனால், ஆன்லைன் வகுப்பு, வீடியோ கான் பரென்ஸ், மீட்டிங் மற்றும் கேமிங் போன்றவற்றிற்கு அதிக வேகம் கொண்ட திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

குறைந்த பட்சம் 2 முதல் 5 எம்.பி.பி.எஸ் (mbps) வேகத்தில் இயங்கும் இணைப்பை பெறுவது சிறந்த அனுபவத்தை தரும். மேலும் 2.4 ஜிகா ஹெர்ட்ஸ் (GHz) அலைவரிசை இணைப்பை விட 5 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசை இணைப்பை பயன்படுத்துவது நல்லது.

ரவுட்டர் வாங்கும்போது, குறைந்தபட்சம் 1 யூ.எஸ்.பி, போர்ட் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். யூ.எஸ்.பி, போர்ட் இருந்தால் தனியாக டாங்கில்-ஐ இணைத்தும் வை-பை இணைப்பை பெறலாம். மேலும் அதிகமாக ஆண்டெனாக்கள் இருக்கும் ரவுட்டரைத் தேர்ந்தெடுத்தால் சிறந்த வை-பை அனுபவத்தை பெற முடியும்.

வை-பை வைக்க வீட்டில் எல்லா அறைக்கும் பொதுவான இடத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. வை-பை இணைப்பு அவசியம் தேவைப்படும் கேஜெட்டுகளுக்கு அருகில் வைக்கலாம். வை-பையை விட கேபிள் மூலம் இணைக்கும்போதுதான் சிறந்த இன்டர்நெட் அனுபவத்தை பெறமுடியும். எனவே ரவுட்டருடன் சேர்ந்து இன்டர்நெட் கேபிள் கிடைக்குமா? என்று கேட்டு வாங்குவது நல்லது.

இதுதவிர, வை-பை இணைப்பில் சிறியதாக கோளாறு ஏதாவது வந்தால் எவ்வாறு சரி செய்வது, வை-பை பாஸ்வேர்ட்டை எப்படி மாற்றுவது, வை-பை இணைப்பை மற்றவர்கள் உபயோகிக்காமல் எவ்வாறு தடுப்பது போன்ற அடிப்படை சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.


Next Story