வீட்டில் காலணி ஸ்டாண்டு அமைக்கும் முறை


வீட்டில் காலணி ஸ்டாண்டு அமைக்கும் முறை
x
தினத்தந்தி 2 Oct 2022 7:00 AM IST (Updated: 2 Oct 2022 7:01 AM IST)
t-max-icont-min-icon

காலணி ஸ்டாண்டு அமைப்புகளில் பயன்படுத்துவதற்கு எளிதானது மரம் அல்லது உலோக அலமாரிகளுடன் கூடிய திறந்த அமைப்பிலான ஸ்டாண்டு.

வீட்டில் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய சரியான இடத்தில் வைப்பது, அதன் அழகை மேலும் அதிகரிக்கும். அந்த வகையில் வீட்டுக்குள் நுழையும்போதே அதில் வசிப்பவர்களின் குணங்களைத் தெரிவிப்பது வாசலில் கழற்றி விடப்பட்டிருக்கும் காலணிகள் தான்.

வீட்டு வாசலில் அழகாக வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும் காலணிகள், அதில் வசிப்பவர்களின் சீரான மனநிலையையும், ஒழுங்கற்று வீசப்பட்டிருக்கும் காலணிகள் அலட்சியமான போக்கையும் வெளிக்காட்டும்.

காலணிகளை ஆங்காங்கே கழற்றி வைக்காமல், அதற்கான எளிமையான ஸ்டாண்டுகளை அமைத்து அடுக்கி வைப்பது பாதுகாப்பான முறையாகும். உங்கள் வீட்டில் இருக்கும் இடத்துக்கு தகுந்தவாறு காலணி ஸ்டாண்டு அமைப்பது பற்றி பார்க்கலாம்.

காலணி ஸ்டாண்டுகள் வெவ்வேறு வடிவமைப்புகள் மற்றும் அளவுகளில் கிடைக்கின்றன. மரம், உலோகம், பிளாஸ்டிக் அல்லது மூங்கில் போன்ற பல்வேறு பொருட்களால் செய்யப்படுகின்றன. இதில் மரத்தாலான ஸ்டாண்டுகளை பலரும் விரும்புகிறார்கள்.

இடத்தைப் பொறுத்து கதவு இருப்பது மற்றும் இல்லாதது போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். தரையில் வைக்க இடம் இல்லாதவர்கள், சுவற்றில் பொருத்திக்கொள்ளும் 'வால்மவுண்ட்' வகை ஸ்டாண்டுகளை பயன்படுத்தலாம் அல்லது சுவற்றில் தொங்கவிடும் வகையிலான ஸ்டாண்டு களை வாங்கலாம்.

காலணி ஸ்டாண்டு அமைப்புகளில் பயன்படுத்துவதற்கு எளிதானது மரம் அல்லது உலோக அலமாரிகளுடன் கூடிய திறந்த அமைப்பிலான ஸ்டாண்டு. முன் மற்றும் பின்பக்கம் திறந் திருக்கும் வகையிலான இவற்றை தரையிலும், சுவற்றிலும் அமைக் கலாம். திறந்த நிலையில் இருப்பதால் எளிதில் காலணிகளைத் தேர்ந்தெடுத்து அணியலாம். அதேசமயம் இவற்றை தொடர்ந்து சுத்தம் செய்து, நேர்த்தியாகப் பராமரிப்பது அவசியம்.

கியூப் வடிவ அறைகளைக் கொண்ட ஸ்டாண்டுகள் அதிக காலணிகளை அடுக்கும் வசதி உள்ளவை. இவற்றில் காலணிகளை ஒழுங்குபடுத்தி வைப்பதும் எளிதானது. பெஞ்சுடன் இணைந்த ஸ்டாண்டு, வசதியாக உட்கார்ந்து காலணிகளை அணிவதற்கு ஏற்றது. இடவசதி குறைவானவர்கள் தொங்கும் காலணி ஸ்டாண்டுகளைப் பயன்படுத்தலாம். இவற்றை எந்தக் கதவிலும், அலமாரியின் உட்புறத்திலும் எளிதாக தொங்கவிடலாம்.

படுக்கைக்குக் கீழே அமைக்கும் வகையிலும் காலணி ஸ்டாண்டுகள் கிடைக்கின்றன. அரிதாகப் பயன்படுத்தும் விலை உயர்ந்த காலணிகளை இவற்றில் வைத்துப் பாதுகாக்கலாம்.


Next Story