தேங்காய் ஓடு நகைப்பெட்டி


தேங்காய் ஓடு நகைப்பெட்டி
x
தினத்தந்தி 10 Sept 2023 7:00 AM IST (Updated: 10 Sept 2023 7:01 AM IST)
t-max-icont-min-icon

அழகான தேங்காய் ஓடு நகைப்பெட்டி தயாரிப்பு குறித்து தெரிந்து கொள்வோம்

தேங்காய் ஓடு நகைப்பெட்டி

தேவையான பொருட்கள்:

தேங்காய் ஓடு, திருகாணி, தாழ்ப்பாள், மர வார்னிஷ், உப்புக்காகிதம், இணைப்பான்.

செய்முறை:

1. பெரிய தேங்காய் ஓடுகள் (கொட்டாங்குச்சி) இரண்டை எடுத்துக்கொள்ளவும்.

2. உப்பு காகிதம் கொண்டு அவற்றின் உள் புறமும், வெளிப்புறமும் மென்மையாக மாறும் வரை தேய்க்கவும்.

3. பின்பு அவற்றின் மேல் வார்னிஷை பூசவும்.

4. நகைப் பெட்டியை உருவாக்க தேங்காய் ஓடுகளின் விளிம்புகள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இப்போது இணைப்பானை எடுத்து, தேங்காய் ஓட்டில் தேவையான இடத்தில் வைத்து, திருகுகளுக்கான புள்ளிகளைக் குறிக்கவும். தாழ்ப்பாளுக்கும் இதேபோல் செய்யவும்.

5. புள்ளிகளை சரியாகக் குறிக்கவேண்டும். இல்லையெனில் இணைப்பான் மற்றும் தாழ்ப்பாள் சரியாகப் பொருந்தாது.

6. பின்னர் டிரில்லிங் மெஷினைக் கொண்டு புள்ளிகள் குறிக்கப்பட்ட இடங்களில் கவனமாக துளையிடவும்.

7. இணைப்பான் மற்றும் தாழ்ப்பாளை அவற்றுக்கான இடங்களில் பொருத்தி, திருகுகளைப் பயன்படுத்தி தேங்காய் ஓடுகளுடன் இணைக்கவும். பின்னர் அதனை உங்கள் விருப்பம்போல அலங்கரிக்கவும்.

8. விரும்பினால் தேங்காய் ஓடுகளின் மேலே மற்றொரு கோட்டிங் வார்னிஷ் பூசலாம். இப்போது 'தேங்காய் ஓடு நகைப் பெட்டி' தயார்.


Next Story