வெற்றிகரமான தொழிலதிபருக்கான தனிப்பட்ட தோற்றம்


வெற்றிகரமான தொழிலதிபருக்கான தனிப்பட்ட தோற்றம்
x
தினத்தந்தி 23 May 2022 11:00 AM IST (Updated: 23 May 2022 11:00 AM IST)
t-max-icont-min-icon

தலைமுடி சுத்தமாகவும், நன்றாக படியும்படி வாரப்பட்ட நிலையிலும் இருக்க வேண்டும். கவனத்தை ஈர்க்கும்படியான வண்ணங்களைக் கொண்ட நிறப்பூச்சுகளை தவிர்க்க வேண்டும். அதிகமாக வாசனை வீசக்கூடிய எண்ணெய் மற்றும் ஜெல்களை பயன்படுத்தக்கூடாது.

தொழில் துறையில் ஈடுபடும் பெண்கள் ஆடை, அணிகலன்கள் மற்றும் தோற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தன்னம்பிக்கை நிறைந்த உங்கள் தோற்றமே மேலும் பல வெற்றிகளை பெற்றுத்தரும்.

உடுத்தும் முறை:

உங்கள் தோற்றமே உங்களது அடையாளம். வேலைச் சூழலுக்கு ஏற்றவாறு நீங்கள் உடைகள் உடுத்தும் விதமும் இருக்க வேண்டும். முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் உங்

களிடம் மதிப்பை காட்டும் வகையில், நீங்கள் அணியும் ஆடைகள் இருக்க வேண்டும். உங்களை சந்திப்பவர்கள், உங்கள் கண்களை பார்த்து பேசும் வகையில், உங்கள் தோற்றம் மரியாதைக்கு உரியதாக இருப்பது சிறந்தது.

வாசனை திரவியங்கள் உபயோகித்தல்:

அடர்த்தியான வாசனை தரும் திரவியங்களை உபயோகிப்பதை தவிர்க்கவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அவற்றை பிடித்திருந்தாலும், தொழில் முறை இடங்களில் பயன்படுத்துவதற்கு அவை ஏற்றது அல்ல. குழுவுடன் சந்திப்பில் ஈடுபடும்போது அடர்த்தியான வாசனை திரவியங்கள் சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தலாம். சிலருக்கு அவை ஆஸ்துமா பிரச்சினையை அதிகரிக்கலாம். சந்திப்பு நிகழும் அறை முழுவதும் அந்தத் திரவியத்தின் வாசனையை பரப்பி விடலாம்.

விரல் நகங்கள் மற்றும் கைகள்:

பெரும்பாலான பெண்கள் பேசும்போது கைகளின் அசைவினை அடிக்கடி பயன்படுத்துவார்கள். அவ்வாறான தருணங்களில் கைகள் கவனம் ஈர்க்கும் புள்ளியாக மாறும். எனவே கைகள் மற்றும் நகங்கள் தொழில்முறை தோற்றத்துடன் இருப்பது அவசியம். நகங்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டும், அளவாக வெட்டப்பட்டும் இருக்க வேண்டும். கண்களைப் பறிப்பது போன்ற 'பளிச்' வண்ண நகப்பூச்சினைத் தவிர்க்க வேண்டும்.

சிகை அலங்காரம்:

தலைமுடி சுத்தமாகவும், நன்றாக படியும்படி வாரப்பட்ட நிலையிலும் இருக்க வேண்டும். கவனத்தை ஈர்க்கும்படியான வண்ணங்களைக் கொண்ட நிறப்பூச்சுகளை தவிர்க்க வேண்டும். அதிகமாக வாசனை வீசக்கூடிய எண்ணெய் மற்றும் ஜெல்களை பயன்படுத்தக்கூடாது.

நகைகள்:

சத்தம் எழுப்பக்கூடிய உலோக நகைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். பெரிய மற்றும் ஆடம்பரமான நகைகளுக்குப் பதிலாக, சிறிய அளவிலான காதணிகளை அணியலாம். அவை காது மடலுக்கு மேல் இருக்க வேண்டும். மெல்லிய கழுத்து சங்கிலி அணியலாம். கைகளில் தரமான கைக்கடிகாரம் அணிவது தோற்றத்தை மேம்படுத்தும்.

ஒப்பனை:

எளிமையாகவும், பகல் நேரத்திற்கு ஏற்றதாகவும் ஒப்பனை செய்வது நல்லது. முழுவதுமாக ஒப்பனை செய்யாமல் இருப்பதும், அதிகப்படியாக ஒப்பனை செய்வதும் தவிர்க்கக் கூடியதாகும்.


Next Story