வானவில் கேக்


வானவில் கேக்
x
தினத்தந்தி 25 Dec 2022 7:00 AM IST (Updated: 25 Dec 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

ஒரு பாத்திரத்தில் விப்பிங் கிரீமைப் போட்டு பீட்டர் கொண்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். பின்னர் அதில் சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசென்ஸ் கலந்து‌‌ மீண்டும் அடிக்கவும். இப்போது கிரீம் தயார்.

வானவில் கேக்

தேவையான பொருட்கள்:

கேக் தயாரிப்பதற்கு:

முட்டை - 3

மைதா - 1¼ கப்

சர்க்கரை - ¾ கப்

பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்

பால் - ¾ கப்

எண்ணெய் - ½ கப்

வெண்ணிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்

விரும்பிய வண்ணங்கள் - 6

கிரீம் தயாரிப்பதற்கு:

விப்பிங் கிரீம் - 1¼ கப்

பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்

வெண்ணிலா எசென்ஸ் - ¼ கப்

சுகர் சிரப் தயாரிப்பதற்கு:

சர்க்கரை - 2 டீஸ்பூன்

தண்ணீர் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

அகலமான பாத்திரத்தில், கேக் செய்யத் தேவையான அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து, நன்றாகக் கலந்துகொள்ளவும். தோசை மாவு பதத்தில் இருக்கும் அந்தக் கலவையை

6 பாகங்களாக பிரித்து, தனித்தனி பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ளவும்.

ஒவ்வொரு மாவிலும் உங்களுக்கு விருப்பமான நிறங்களை தனித்தனியாக கலந்துகொள்ளவும். ஓவனை 180 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு சூடு படுத்தவும். பின்னர் தனித்தனி கேக் டிரேயில் வெண்ணெய் தடவி, அதில் மாவை ஊற்றி ஓவனில் வேகவைத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் விப்பிங் கிரீமைப் போட்டு பீட்டர் கொண்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். பின்னர் அதில் சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசென்ஸ் கலந்து மீண்டும் அடிக்கவும். இப்போது கிரீம் தயார்.

மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து 'சுகர் சிரப்' தயாரித்து ஆற வைக்கவும்.

பின்பு தயாரித்து வைத்துள்ள கேக் அடுக்குகள் மீது சுகர் சிரப்பைத் தெளித்து, அதன்மேல் கிரீம் தடவி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும். கேக்கின் மீது உங்கள் விருப்பத்திற்கேற்ப அலங்காரம் செய்யவும். இப்போது சுவையான 'வானவில் கேக்' தயார்.

கம்பு கேக்

தேவையான பொருட்கள்:

முட்டை - 2

கம்பு மாவு - 60 கிராம்

பொடித்த சர்க்கரை - 50 கிராம்

பால் - 20 மில்லி

வெண்ணிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி பீட்டர் கொண்டு நன்றாக அடித்துக்கொள்ளவும்.

பின்பு அதில் சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்துக்கொண்டே நன்றாக அடித்துக் கலக்கவும்.

சர்க்கரை முழுதாகக் கரைந்ததும், கம்பு மாவை கொட்டி மென்மையாக கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.

பிறகு அதில் பால் மற்றும் வென்ணிலா எசன்ஸ் கலந்து மீண்டும் மிருதுவாக நன்றாகக் கலக்கவும்.

கேக் டிரேயில் வெண்ணெய் அல்லது நெய் தடவிய பின்பு, மாவுக் கலவையை ஊற்றி வேக வைக்கவும்.

கேக் வெந்து ஆறியதும் டிரேயில் இருந்து எடுத்து விருப்பப்பட்டால் 'ஐசிங் சுகர்' கொண்டு அலங்கரிக்கலாம்.


Next Story