இத்தாலியன் ஹாட் சாக்லெட் டிரிங்க் மிக்ஸ்


இத்தாலியன் ஹாட் சாக்லெட் டிரிங்க் மிக்ஸ்
x
தினத்தந்தி 1 Jan 2023 7:00 AM IST (Updated: 1 Jan 2023 7:01 AM IST)
t-max-icont-min-icon

இத்தாலியன் ஹாட் சாக்லெட் டிரிங்க், சாக்லெட் பைட்ஸ், சாக்லெட் புட்டிங் ரெசிபிகளை தெரிந்து கொள்வோம்.

இத்தாலியன் ஹாட் சாக்லெட் டிரிங்க் மிக்ஸ்

தேவையான பொருட்கள்:

கொக்கோ பவுடர் - 1 கப்

சர்க்கரை - 1 கப்

சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

பால் பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்

டார்க் சாக்லெட் (துருவியது) - ½ கப்

செய்முறை:

அனைத்துப் பொருட்களையும் ஈரமில்லாத அகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இப்போது 'சாக்லெட் டிரிங்க் மிக்ஸ்' தயார். இதனை ஈரப்பதம் இல்லாத சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு, காற்று புகாதவாறு இறுக்கி மூடவும். இந்த பவுடரை குளிர்பதனப் பெட்டியில் வைத்து 6 மாதம் வரை பயன்படுத்தலாம்.

ஒரு கப் சூடான பாலில் 2 டீஸ்பூன் சாக்லெட் டிரிங்க் பவுடரை, கட்டியில்லாமல் கலக்கி பரிமாறலாம்.

சாக்லெட் பைட்ஸ்

தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 1 கப்

வெண்ணெய் - ½ கப்

முட்டை - 1

கொக்கோ பவுடர் - ½ கப்

பால் - ¼ கப்

வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

கோதுமை மாவு - 1¾ கப்

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

உப்பு - ½ டீஸ்பூன்

நட்ஸ் (நறுக்கியது) - ½ கப்

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை, முட்டை ஆகியவற்றை சேர்த்து அடித்து கலக்கவும். பின்பு அதில் பால், கொக்கோ பவுடர், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

பின்னர் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கலக்கவும். அதில் உங்களுக்கு விருப்பமான நட்ஸ் வகைகளை இறுதியாக சேர்த்துக்கொள்ளலாம்.

இப்போது இந்தக் கலவையை டீஸ்பூன் மூலம் எடுத்து, பேக்கிங் தாள் முழுவதும் இடைவெளி விட்டு தனித்தனியாக வைக்கவும். அதை 375 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் ஓவனில் 12 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

சாக்லெட் புட்டிங்

தேவையான பொருட்கள்:

பேக்கிங் கொக்கோ பவுடர் - ¼ கப்

சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்

சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்

பால் - 1½ கப்

வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை கொட்டி கலக்கவும். பின்பு அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்கவும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும். கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும். பின்னர் அதை கப்களில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும். நன்றாகக் குளிர்ந்ததும் துருவிய சாக்லெட் மேலே தூவி பரிமாறவும்.


Next Story