பால் குறித்த சுவாரசிய தகவல்கள்
பாலில் நிறைந்துள்ள கொழுப்பு மற்றும் புரத மூலக்கூறுகள், நீரில் மிதக்கும் போது ஏற்படும் ஒளிச்சிதறலின் பிரதிபலிப்பே, பாலுக்கு வெள்ளை நிறத்தைக் கொடுக்கிறது.
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கும் மேலாக, பால் அனைவராலும் அருந்தப்பட்டு வருகிறது. அதிலும் பசு, எருமை, ஆடு மற்றும் கழுதைப்பால் அன்று முதல் இன்று வரை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் சத்துக்கள் மற்றும் பயன்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்க, உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி 'உலக பால் தினம்' அனுசரிக்கப்படுகிறது.
ஒரு கப் பாலில் (சுமார் 250 கிராம் அளவு) உள்ள சத்துக்கள் வருமாறு:-
கலோரி-122, கொழுப்பு-4.8 கிராம், சோடியம்-115 மில்லி கிராம், கார்போஹைட்ரேட்- 12 கிராம், சர்க்கரை-12 கிராம், புரோட்டீன்-8.1 கிராம் அளவில் உள்ளது.
சதவீத அடிப்படையில் 100 மில்லி லிட்டர் அளவு உள்ள பாலில் 26 சதவீதம் புரோட்டீன், 39 சதவீதம் கார்போஹைட்ரேட், 35 சதவீதம் கொழுப்பு சத்துக்கள் உள்ளது.
பாலில் நிறைந்துள்ள கொழுப்பு மற்றும் புரத மூலக்கூறுகள், நீரில் மிதக்கும் போது ஏற்படும் ஒளிச்சிதறலின் பிரதிபலிப்பே, பாலுக்கு வெள்ளை நிறத்தைக் கொடுக்கிறது.
ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவை பாலில் கலந்து குளிர்பதனப் பெட்டியில் வைத்தால், ஒரு வாரம் வரை பால் கெடாமல் இருக்கும். இதை பிரிட்ஜில் உறை நிலையில் கூட வைக்கலாம். இதனால் பாலில் உள்ள சத்துக்களில் எவ்வித மாற்றமும் நிகழாது.
உலக அளவில், இந்தியாவில்தான் அதிக அளவு பால் உற்பத்தி செய்யப்படுகிறது. பால் பவுடர் இந்தியாவில் இருந்து அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. காய்கறிகள் மற்றும் இறைச்சியில் உள்ள பெரும்பாலான சத்துக்கள் பாலில் நிறைந்துள்ளன.
பத்து லிட்டர் பாலைக் கொண்டு அரை கிலோ பாலாடைக்கட்டி (சீஸ்) தயாரிக்கப்படுகிறது.
பாலில் உள்ள கொழுப்பு, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவும். வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
தொடர்ந்து பால் குடித்து வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு புரை நோயை குணப்படுத்தலாம். மேலும், முதியவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானத்தை குணப்படுத்தும் ஆற்றல் பாலில் உள்ள சத்துக்களுக்கு உண்டு.
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரிக்க முடியும்.
அனைத்து சத்துக்களும் கொண்ட பால், உலகில் 65 சதகிவிதம் பேருக்கு லாக்டோஸ் இன்டோலரன்ஸ் என்ற பிரச்சினையை உண்டாக்குகிறது. பாலில் உள்ள லாக்டோஸ் எனும் மூலக்கூறு சிலருக்கு
ஒவ்வாமை, அழற்சி அல்லது மலச்சிக்கலை உண்டாக்கும். இவர்கள் பாதாம், தேங்காய், முந்திரி, சோயா, ஓட்ஸ் மற்றும் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் பாலைப் பருகலாம்.