மினி மாரத்தான் போட்டி


மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 9 Oct 2023 12:04 AM IST (Updated: 9 Oct 2023 10:36 AM IST)
t-max-icont-min-icon

பா.ம.க. பசுமை தாயகம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.

வேலூர்

வேலூர் மேற்குமாவட்ட பா.ம.க. மற்றும் பசுமை தாயகம் சார்பில். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பருவநிலை, காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. பா.ம.க. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர்.பாலாஜி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜி.சுரேஷ்குமார், மாவட்ட அமைப்பு தலைவர் ஜி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் அரவிந்தன், காமராஜ், இளம்பருதி, அசோக்குமார், கோடீஸ்வரன், முருகன், நகர செயலாளர்கள் எஸ்.ரமேஷ், எஸ்.குமார், முகமதுபாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கு.வெங்கடேசன் வரவேற்றார். போட்டியை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

சித்தூர்கேட்டில் இருந்து தொடங்கி ராமாலை, ஆர்.கிருஷ்ணாபுரம், சேங்குன்றம் வழியாக சுமார் 14 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் 500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பரிசு கோப்பையும், 22 பேருக்கு ஆறுதல் பரிசாக ரூ.25,000 மற்றும் வெற்றிக்கோப்பைகள் வழங்கப்பட்டது. பசுமை தாயகம் மாநில துணைத்தலைவர் சங்கர் கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் குணசீலன், ஒன்றியகுழு உறுப்பினர் சரவணன், அன்பரசன், திருமலை, ஞானவேல், ரமேஷ், சுரேஷ், குமரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், வேல்முருகன், குமரேசன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story