கவரிங் நகைகளுக்கு மாற்று வழி


கவரிங் நகைகளுக்கு மாற்று வழி
x
தினத்தந்தி 26 Jun 2022 7:00 AM IST (Updated: 26 Jun 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

இயற்கையாக கிடைக்கும் முத்துக்கள் சற்றே விலை உயர்ந்தவை. இவற்றை போலவே தற்போது செயற்கை முத்துக்களும் கிடைக்கின்றன. இவற்றை அணிந்தால் பார்ப்பதற்கு நேர்த்தியாகவும், அனைத்து ஆடைகளுக்கும் பொருத்தமாகவும் இருக்கும்.

கைகளை விரும்பாத பெண்கள் இருக்க முடியாது. பலவகையான உலோகங்களால் ஆன நகைகளை அணிந்தாலும், தங்கத்தின் மீது கொண்ட ஈர்ப்பு பெண்களுக்கு இன்று வரை குறைய வில்லை. விலை உயர்வு, பாதுகாப்பு போன்ற காரணங்களால், தங்கத்துக்கு மாற்றாக கவரிங் நகைகள் அணிவார்கள். ஆனால் இவ்வகை நகைகள், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். சரும பாதிப்புகளை அதிகரிக்கும். இவர்கள் கவரிங் நகைகளைத் தவிர்த்து பின்வரும் உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகளை அணியலாம்.

வெள்ளி:

தற்போது தங்க நகைகளுக்கு நிகராக, வெள்ளியால் தயாரிக்கப்பட்ட நகைகள் தங்க முலாம் பூசப்பட்டு சந்தையில் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு தங்கத்தைப் போலவே இருப்பதால் இவற்றுக்கு மவுசு அதிகம். வெள்ளி, தங்கத்தை விட விலை குறைவானது. வெள்ளியில், திருமணத்திற்கு அணிவதற்கு ஏற்ற பிரமாண்ட நகைகள் முதல் தினசரி அணியும் எளிய டிசைன் நகைகள் வரை கிடைக்கின்றன.

முத்து:

இயற்கையாக கிடைக்கும் முத்துக்கள் சற்றே விலை உயர்ந்தவை. இவற்றை போலவே தற்போது செயற்கை முத்துக்களும் கிடைக்கின்றன. இவற்றை அணிந்தால் பார்ப்பதற்கு நேர்த்தியாகவும், அனைத்து ஆடைகளுக்கும் பொருத்தமாகவும் இருக்கும்.

கண்ணாடி நகைகள்:

பழங்காலத்தில் இருந்தே அணிந்து வரும் நகைகளில் கண்ணாடியால் தயாரிக்கப்படும் நகைகளும் ஒன்று. வளையல்கள் மட்டுமில்லாமல் கழுத்து மற்றும் காதணி வகைகளும் தற்போது கண்ணாடியில் கிடைக்கின்றன. இவற்றை அணிவதிலும், பராமரிப்பதிலும் சற்றே கவனமாக இருக்க வேண்டும்.

பேஸ் மெட்டல்:

'பேஸ் மெட்டல்' என்று சொல்லப்படும் பித்தளை, செம்பு, வெண்கலம் போன்ற உலோகங்களால் ஆன நகைகளை அணியலாம். இவற்றை தங்க முலாம் பூசியும், அவற்றின் அசல் நிறத்திலும் அணிவது நேர்த்தியாக இருக்கும். உலோகங்களின் அசல் நிறத்திலேயே நகைகளை அணியும்போது, வித்தியாசமாக காணப்படுவதோடு வெஸ்டர்ன் மற்றும் இந்தோ வெஸ்டர்ன் போன்ற ஆடை வகைகளுக்குப் பொருத்த மாகவும் இருக்கும்.

டெரகோட்டா:

தற்போது டிரெண்டில் இருப்பது டெரகோட்டா நகைகள்தான். இவை களிமண்ணில் தயாரிக்கப்படும் நகைகள். கைவினை கலைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மூலம் டெரகோட்டா நகைகள் தயாரித்து விற்கப்படுகின்றன. இவை மாடர்ன் ஆடைகள் முதல் சல்வார், புடவை என அனைத்து ஆடைகளுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.

குவில்லிங் நகைகள்:

பல வண்ண காகித சுருள்கள் மூலம் தயாரிக்கப்படுபவை குவில்லிங் நகைகள். கல்லூரி மாணவிகள் முதல் அனைவராலும் அதிகம் விரும்பி அணியப்படும் நகைகளில் ஒன்றாக இவை உள்ளது. காகிதத்தால் செய்யப்படுவதால் விலையும் குறைவு.


Next Story