உலக சாதனைகள் படைக்கும் நித்யா


உலக சாதனைகள் படைக்கும் நித்யா
x
தினத்தந்தி 11 Dec 2022 7:00 AM IST (Updated: 11 Dec 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

பல கவிதைத் தொகுப்பு நூல்களை உருவாக்கி இருக்கிறேன். சிறந்த கவித்திறமை உடையவர்கள், நூல்களை வெளியிட உதவி வருகிறேன். எனக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

"பிறந்த தாய்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், இன்னும் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க வேண்டும்" என்கிறார் நித்யா.

கின்னஸ் உள்ளிட்ட எட்டு தனிநபர் உலக சாதனைகள் மற்றும் எட்டு குழு உலக சாதனைகள் படைத்துள்ள இவர், மனித உரிமைகளுக்கு எதிரான சர்வதேச ஊழல் எதிர்ப்பு அமைப்பின் கவுரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார். அவரிடம் உரையாடியதில் இருந்து..

"நான் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவள். என் பெற்றோர் கோவிந்தராஜ்-தேவிகா. எனது கணவர் சிவா தனியார் வங்கியில் பணியாற்றுகிறார். மகன் அனிஷ் ஐந்தாம் வகுப்பும், மகள் ஜான்வி மழலையர் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.

நான் கணிதம், கல்வியியல் போன்றவற்றில் முதுகலைப் பட்டமும், முதுகலை ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளேன். ஆசிரியராகவும், சமூகப் பணியாளராகவும் செயல்படுகிறேன்.

மாணவர்களுக்கு எளிய முறையில் கணிதத்தைக் கற்பித்து வருகிறேன். வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் இலவசமாகக் கல்வி அளிப்பதே எனது நோக்கம். தற்போது சென்னை வேளச்சேரியில் வசிக்கும் நான், அறக்கட்டளை மற்றும் கல்விக் குழுமம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறேன்.

பல கவிதைத் தொகுப்பு நூல்களை உருவாக்கி இருக்கிறேன். சிறந்த கவித்திறமை உடையவர்கள், நூல்களை வெளியிட உதவி வருகிறேன். எனக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

நீங்கள் செய்துள்ள சாதனைகள் என்ன?

கடந்த ஆண்டு, 10 மைல் தொலைவு தொடர் ஓட்டப்பந்தயம் ஓடி கின்னஸ் உலக சாதனை படைத்தேன். ஒரு நிமிடத்தில் 40 முறை 'டம்பிள்ஸ் பயிற்சி' செய்து புதிய உலக சாதனை படைத்து 'ஜீனியஸ் புக் ஆப் ரெக்கார்ட்'டில் இடம் பிடித்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றேன். யோகாசனத்தில் சாதனை படைத்தது உள்ளிட்ட, எட்டு தனிநபர் உலக சாதனைகளையும், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆயிரம் நபர்களை ஒரே நேரத்தில் தங்களது கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய வைத்து கின்னஸ் உலக சாதனை படைத்தது உள்ளிட்ட எட்டு குழு உலக சாதனையையும் செய்திருக்கிறேன். எனது குடும்பத்தினர் மற்றும் என்னுடைய மாணவர்கள் பலரும் கின்னஸ் சாதனை செய்வதற்கு தூண்டுகோலாய் இருந்திருக்கிறேன்.

நீங்கள் செய்துவரும் சமூக பணிகள் பற்றிச் சொல்லுங்கள்?

முழு உடல் தானம் செய்வதற்கு நான் பதிவு செய்திருக்கிறேன். புற்றுநோயாளிகளுக்கு 'விக்' தயாரிப்பதற்காக முடிதானம், ரத்த தானம், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மரக்கன்றுகளை நடுதல், ஆன்லைன் மூலமும் அனைவருக்கும் இலவசக் கல்வி அளித்தல், சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து வருகிறேன்.


Next Story