தங்கம் வெல்ல முடியாததற்கு மன்னிப்பு கேட்ட பூஜா..! ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

தங்கம் வெல்ல முடியாததற்கு மன்னிப்பு கேட்ட பூஜா..! ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 7 Aug 2022 12:13 PM IST (Updated: 7 Aug 2022 12:14 PM IST)
t-max-icont-min-icon

காமன்வெல்த்தில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான (50 கிலோ) ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்தியாவின் பூஜா கெலாட் வெண்கலப்பதக்கத்தை கைப்ப்ற்றினார்.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது

காமன்வெல்த்தில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான (50 கிலோ) ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்தியாவின் பூஜா கெலாட் வெண்கலப்பதக்கத்தை கைப்ப்ற்றினார்.

இந்த நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பூஜா கெலாட் கூறியதாவது ;

"எனது நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். (தங்கம் வென்று) தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன்... ஆனால் என் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அவற்றை சரிசெய்வேன்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதற்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார் .இது குறித்து அவர் வெளியுட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

பூஜா,நீங்கள் பதக்கம் வென்றது கொண்டாடப்பட வேண்டியது .,மன்னிப்பு அவசியமற்றது .உங்கள் பயணம் எங்களை ஊக்குவிக்கிறது, உங்கள் வெற்றி எங்களை மகிழ்விக்கிறது.என கூறியுள்ளார் .

Next Story