காமன்வெல்த் 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டம்: இந்தியாவின் சந்தீப் குமார் வெண்கலம் வென்று சாதனை


காமன்வெல்த் 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டம்: இந்தியாவின் சந்தீப் குமார்  வெண்கலம் வென்று சாதனை
x

Image Tweeted By @Media_SAI

10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலம் வென்றுள்ளார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 16 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களை வென்றுள்ளது.

10-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று குத்துச்சண்டையில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது, மேலும் மகளிர் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம், மும்முறை தாண்டுதலில் 2 பதக்கம் என அசத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலம் வென்றுள்ளார். அவர் 38:49 நிமிடத்தில் இலக்கை அடைந்து வெண்கலம் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.


Next Story