காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் : இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்


காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் : இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
x

இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

இந்த நிலையில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முனைப்பு காட்டும்.இதனால் இந்திய அணிக்கு இது முக்கியமான போட்டியாகும்.இந்த போட்டி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story