காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது ஆஸ்திரேலியா


காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது ஆஸ்திரேலியா
x

ஆஸ்திரேலிய அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

பர்மிங்காம்,

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்து அணியும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டி செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் டிவைன் 53 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது. அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 36 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளது.


Next Story