கிச்சா சுதீப்பின் 'மேக்ஸ்' படம் ஓ.டி.டியில் வெளியாவது எப்போது?
'மேக்ஸ்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னை,
கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். 'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது ஆக்சன் திரில்லர் படமாக 'மேக்ஸ்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்க, வி கிரியேசன்ஸ் சார்பில் எஸ். தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் சுதீபா, வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே மற்றும் அனிருத் பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த இப்படம் கடந்த 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படம் வரும் 31-ம் தேதி ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.