ஓ.டி.டியில் வெளியான புஷ்பா இயக்குனர் மகளின் படம்

புஷ்பா இயக்குனரின் மகள் நடித்த முதல் படம் ஓ.டி.டியில் வெளியானது
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 ரூ. 1,831 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப்படைத்தது. சுகுமாரின் மகள் சுக்ரிதி வேணி பாண்ட்ரெட்டி. இவர் தற்போது சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.
காந்திய கொள்கையான அகிம்சையை மையமாக கொண்டு உருவாகியுள்ள 'காந்தி தாத்தா செட்டு' என்ற படத்தில் இவர் நடித்திருக்கிறார். கடந்த ஜனவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது ஓ.டி.டியில் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அமேசான் பிரைம் தளத்தில் 'காந்தி தாத்தா செட்டு' படம் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
இப்படம் ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது. அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்காக சுக்ரிதி வேணி பாண்ட்ரெட்டி சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தாதாசாஹேப் பால்கே விருதை வென்றார் எனப்து குறிப்பிடத்தக்கது.