மோகன்லால் இயக்கி நடித்த 'பரோஸ்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு


Mohanlals directorial debut Barroz locks OTT release date
x

மோகன்லால் இயக்குனராக அறிமுகமான படம் பரோஸ்

சென்னை,

நடிகர் மோகன்லால் இயக்குனராக அறிமுகமான படம் பரோஸ். இந்த படத்தில் இவருடன் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்திருந்தனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்த இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பில் 3டி-யில் உருவான இந்தப் படம், பான் இந்தியா முறையில் கடந்த மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மோகன்லால் இயக்கிய முதல் படம் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தநிலையில், பரோஸ் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தோல்வியடைந்தது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 22-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாக உள்ளது.


Next Story