இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்


இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
x
தினத்தந்தி 13 Nov 2024 12:23 PM IST (Updated: 28 Nov 2024 8:32 AM IST)
t-max-icont-min-icon

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

'தி பென்குயின்'

வார்னர் பிரதர்ஸ் உடன் இணைந்து டிசி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள வெப் தொடர் தி பென்குயின். இது ஒரு கிரைம் திரில்லர் தொடராகும். கொலின் பாரெல் நடிப்பில், இந்த எட்டு எபிசோட்கள் கொண்ட மேக்ஸ் ஒரிஜினல் தொடர், தி பேட் மேன் படத்தின் தொடர்கதை இந்த வெப் தொடர் உருவாகி உள்ளது. இந்தநிலையில், 'தி பென்குயின் சீசன் 1' தொடரின் 8 எபிசோட்களும் கடந்த 11-ந் தேதி ஜியோ சினிமா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'டெட்பூல் & வோல்வரின்'

மார்வெல் படங்களின் வரிசையில் டெட்பூல் படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. இதற்கு 'டெட்பூல் & வோல்வரின்' என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியானது. ரியான் ரெனால்ட் மற்றும் ஹக் ஜேக்மேன் நடித்துள்ள இப்படம் ரூ.8,000 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடி 'டெட்பூல் & வோல்வரின்' படம் நேற்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'பேட்ட ராப்'

எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான படம் 'பேட்ட ராப்'. இந்த படத்தில் கதாநாயகியாக வேதிகா நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கியமான பாடலுக்கு நடிகை சன்னி லியோன் நடனமாடியுள்ளார். இந்த நிலையில் இப்படம் நேற்று அமேசான் பிரைம் விடியோ ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'மா நன்னா சூப்பர் ஹீரோ'

மா நன்னா சூப்பர் ஹீரோ அபிலாஷ் ரெட்டி கன்காரா இயக்கிய தெலுங்கு குடும்ப நாடகத் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுதீர் பாபு மற்றும் அர்னா வோஹ்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வலுவான அப்பா-மகன் உணர்ச்சிகளைக் கொண்டு உருவாகி உள்ளது. இந்தநிலையில் இப்படம் இன்று அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் வருகிற 15-ந் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்திலும் வெளியாக உள்ளது.

'தி மேஜிக் ஆப் ஷிரி'

இது ஒரு இல்லத்தரசியின் கதையை சொல்கிறது, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களை இந்த தொடர் காட்டுகிறது. இதில் திரிபாதி, ஜாவேத் ஜாபரி மற்றும் நமித் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடர் நாளை ஜியோ சினிமா ஓ.டி.டி தளத்திலும் வெளியாக உள்ளது.

'பிரீடம் அட் மிட்நைட்'

நிகில் அத்வானி இயக்கியுள்ள வெப் தொடர் 'பிரீடம் அட் மிட்நைட்' . இதில் ராஜேந்திர சாவ்லா மற்றும் லூக் மெக்கிப்னி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடர் மகாத்மா காந்தி, இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிரிவினையை பற்றி ஆராயும் ஒரு வரலாற்று தொடராகும். இந்த வெப் தொடர் வருகிற 15-ந் தேதி சோனி லிவ் ஓ.டி.டி தளத்திலும் வெளியாக உள்ளது.


Next Story