ஓ.டி.டி.யில் வெளியாகும் திலீப்பின் 'பவி கேர்டேக்கர்'


ஓ.டி.டி.யில் வெளியாகும் திலீப்பின் பவி கேர்டேக்கர்
x
தினத்தந்தி 17 July 2024 10:22 AM GMT (Updated: 17 July 2024 12:32 PM GMT)

திலீப் நடிப்பில் வெளியான 'பவி கேர்டேக்கர்' படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

வினீத் குமார் இயக்கத்தில் மலையாள நடிகர் திலீப் நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம் 'பவி கேர்டேக்கர்'. இந்த படத்திற்கு மிதுன் முகுந்தன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ஸ்வாதி கொண்டே மற்றும் ஜானி ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் திலீப் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியாக நடித்துள்ளார். இதில் நகைச்சுவை, நட்பு மற்றும் காதல் போன்றவை இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி பார்க்க தவறிய பார்வையாளர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கும் வகையில் படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த படம் வருகிற 26-ந் தேதி மனோரமா ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.




Next Story