ஓ.டி.டி.யில் வெளியான நபா நடேஷ் நடித்துள்ள 'டார்லிங்'


ஓ.டி.டி.யில் வெளியான நபா நடேஷ் நடித்துள்ள டார்லிங்
x

நபா நடேஷ் நடித்துள்ள 'டார்லிங்' திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

சென்னை,

தெலுங்குத் திரையுலகிலும் பிரபல நடிகையாக இருப்பவர் நபா நடேஷ். இவர் 'டார்லிங்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோரால் இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படத்திற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார்.

மேலும் அனன்யா நாகல்லா, மொயின், சிவா ரெட்டி, முரளிதர் கவுட், பிரம்மானந்தம் மற்றும் கலினி ராஜ் ஆகிய முன்னனி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நகைச்சுவை திரைப்படமான இது இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.


Next Story