'தெலுங்கு சினிமாவில் நடிக்கவில்லை என்றால் அவர்கள்...' - மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் தெலுங்கு சினிமாவை பாராட்டி இருக்கிறார்
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் கடைசியாக 'யுத்ரா' என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2', மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் 'ஹிருதயப்பூர்வம்' மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனன் தெலுங்கு சினிமாவை பாராட்டி இருக்கிறார். அவர் கூறுகையில்,
'டோலிவுட் இப்போது பாலிவுட் அளவுக்கு பெரியதாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் நடிக்காதவர்கள் உண்மையிலேயே சிறப்பான ஒன்றை இழக்கிறார்கள்' என்றார்.
Related Tags :
Next Story