"நீங்க மாஸ் சார்" - சிம்புவுக்கு நன்றி தெரிவித்த பிரதீப் ரங்கநாதன்

'டிராகன்' படத்தில் நடிகர் சிம்பு பாடிய 'ஏன்டி விட்டு போன' என்ற பாடல் நாளை வெளியாகிறது.
சென்னை,
'ஓ மை கடவுளே' திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக 'டிராகன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரைஸ் ஆப் தி டிராகன்' மற்றும் 'வழித்துணையே' பாடல்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து, 'டிராகன்' படத்தில் நடிகர் சிம்பு பாடிய 'ஏன்டி விட்டு போன' என்ற பாடலின் புரோமோ வீடியோ நேற்று வெளியானது. இந்த பாடல் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் , சிம்புவிற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், 'வேறு ஒருவருடைய படத்திற்கு புரமோஷன் பண்ணுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? என்ன கிடைக்கும் என்று யோசிக்காமல், என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கிறவன் மாஸ் நீங்க மாஸ் சார்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.