'ஸ்ரீ வள்ளி இல்லையென்றால் புஷ்பா இல்லை' - அல்லு அர்ஜுன்
வரும் 5-ந் தேதி புஷ்பா 2: தி ரூல் படம் உலகளவில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் 5-ந் தேதி உலகளவில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. தற்போது, இப்படத்தின் புரமோஷன் பணிக்காக படக்குழுவினர் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மும்பையில், படத்தின் புரமோஷன் பணி நடைபெற்றது.
அப்போது பேசிய அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனாவுக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
' இப்படத்திற்கு ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா கொடுத்த ஆதரவு மகத்தானது. ஸ்ரீவள்ளியின் ஆதரவு இல்லாமல் புஷ்பா படம் முழுமையடைய வாய்ப்பில்லை. படப்பிடிப்பு தினமும் நடக்கும். ராஷ்மிகா எப்போதாவது ஒருமுறை வருவார். அவ்வாறு அவர் வரும், அந்த நாட்கள் மிகவும் இனிமையானவையாக இருக்கும்' என்றார்.