வனவிலங்கு படத் தயாரிப்பாளர் சுப்பையா நல்லமுத்துவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு


வனவிலங்கு படத் தயாரிப்பாளர் சுப்பையா நல்லமுத்துவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2024 5:36 PM IST (Updated: 15 Jun 2024 6:09 PM IST)
t-max-icont-min-icon

18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் வனவிலங்கு படத் தயாரிப்பாளர் சுப்பையா நல்லமுத்துவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

வனவிலங்குகள் குறித்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிட்டு வரும் தமிழகத்தை சேர்ந்த சுப்பையா நல்லமுத்துவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறைக்கான மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். 18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு டாக்டர் வி. சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

வனவிலங்குகள் குறித்த திரைப்படத் தயாரிப்பாளரான சுப்பையா நல்லமுத்து 5 முறை தேசிய விருது பெற்ற சிறப்புக்குரியவர். வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து இவர் உருவாக்கிய 'லிவிங் ஆன் தி எட்ஜ்' திரைத்தொடருக்காக 'பாண்டா விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவில் ஒளிப்பதிவுத் துறையில் பணிபுரிந்த அனுபவமும் இவருக்கு உண்டு. வங்காளப் புலிகள் குறித்த இவரது ஆர்வத்தால், சர்வதேச அளவில் புலிகள் குறித்த ஆவணப்படங்களை எடுத்து உலக கவனத்தை ஈர்த்தவர். முதன்முதலாக, 4கே துல்லியத்துடன் வனவிலங்குகள் குறித்த படங்களை பதிவு செய்த பெருமை இவரையே சாரும். ஜாக்ஸன் ஹோல் வனவிலங்குகள் திரைப்பட விழாவில் நடுவராக இருந்து வருபவரும் கூட.


Next Story