'லைலா'- வைரலாகும் விஷ்வக் சென்னின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்


Vishwaksen’s female look from Laila unveiled
x

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு பெயர் போன விஷ்வக் சென் தற்போது ’லைலா’ படத்தில் நடித்து வருகிறார்

சென்னை,

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நட்சத்திரங்களில் ஒருவர் விஷ்வக் சென். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களால் பாராட்டப்படும் இவரது நடிப்பில் , கடந்த ஆண்டு கேங்க்ஸ் ஆப் கோதாவரி, ஹாமி மற்ரும் மெக்கானிக் ராக்கி ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

தற்போது இவர் லைலா என்ற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக அகன்ஷா ஷர்மா நடித்துள்ளார். முன்பு கூறியதுபோல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பேர்போன விஷ்வக் சென் இப்படத்தில் ஆண், பெண் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ஆண் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தநிலையில் தற்போது பெண் கதாபாத்திரத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

ராம் நாராயண் இயக்கும் இப்படத்தை ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரின் கீழ் சாஹு கரபதி தயாரிக்கிறார். அடுத்த மாதம் 14-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளநிலையில், வரும் 17-ம் தேதி இதன் டீசர் வெளியாக உள்ளது.


Next Story