டான் 3-ல் வில்லனாக விக்ராந்த் மாஸ்ஸி?


Vikrant Massey Villain In Don 3
x

'டான் 3' படத்தில் ரன்வீர் சிங் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சென்னை,

பிரபல பாலிவுட் இயக்குனர் பர்ஹான் அக்தர். இவரது இயக்கத்தில் 'டான் 3' என்ற படம் உருவாகி வருகிறது. இதில் ரன்வீர் சிங் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இப்படம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, இப்படத்தில் வில்லனாக நடிக்க 12-த் பெயில் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்ராந்த் மாஸ்ஸி, '12-த் பெயில்' மற்றும் "ஹசீன் தில்ருபா" ஆகிய படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார். சமீபத்தில், "தி சபர்மதி ரிப்போர்ட்" படத்தில் நடித்திருந்தார்.

இந்த சூழலில், டான் 3 படத்தில் ரன்வீர் சிங் மற்றும் கியாரா அத்வானியுடன் விக்ராந்த் மாஸ்ஸி நடிக்க இருப்பதாக கூறப்படுவது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story