'ஜன நாயகன்' படத்தின் முதல் பாடல் - வெளியான முக்கிய தகவல்


Vijay, Anirudh’s musical treat from Jana Nayagan on this special day?
x
தினத்தந்தி 2 Feb 2025 2:51 AM (Updated: 9 Feb 2025 2:41 AM)
t-max-icont-min-icon

விஜய்யின் 69-வது படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஜன நாயகன் படத்தின் முதல் பாடலை வரும் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Next Story