'விடாமுயற்சி' படப்பிடிப்பு நிறைவு: நடிகர் அஜித் குமாருக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் மகிழ் திருமேனி!


விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவு: நடிகர் அஜித் குமாருக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் மகிழ் திருமேனி!
x

நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில், எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு.... என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் படத்தின் இயக்குனரான மகிழ் திருமேனி படப்பிடிப்பின் இறுதி நாளான இன்று அவரது நன்றியை வெளிப்படுத்தி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இப்பதிவை லைகா படக்குழு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில் 'உங்களுக்கு என்னுடைய அன்பும் நன்றியும். நீங்கள் எங்களின் வழிகாட்டியாக இருந்துள்ளீர்கள். ஒட்டுமொத்த விடாமுயற்சி படக்குழுவுக்கும் ஊக்கத்தை அளித்துள்ளீர்கள். முதல் நாள் முதல் இன்று வரை நீங்கள் எனக்கு அளித்த அன்பு, அக்கறை மற்றும் ஆதரவுக்கு நன்றி' என மகிழ் திருமேனி கூறியுள்ளார்.


Next Story