திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான அரோமா மணி காலமானார்
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான அரோமா மணி காலமானார்.
திருவனந்தபுரம்,
பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான அரோமா மணி (எம்.மணி) காலமானார். திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். இவருக்கு வயது 65.
அரோமா மணி, அரோமா மூவீஸ் மற்றும் சுனிதா புரொடக்சன்ஸ் ஆகியவற்றின் கீழ் 60 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளார். கடந்த 1977-ம் ஆண்டு மது நடிப்பில் வெளியான "தீரசாமிரே யமுனா தீரே" படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
இவர் தயாரிப்பில் வெளிவந்த 'திங்கலஞ்ச நல்ல தெய்வம்', தூரே தூரே ஒரு கூடு கூட்டம்' போன்ற படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டு பகத் பாசில் நடித்த 'ஆர்ட்டிஸ்ட்' இவர் தயாரித்த கடைசி படமாகும்.
மேலும், இவர் ஏழு படங்களை இயக்கியும் உள்ளார். கடந்த 1982ம் ஆண்டு வெளிவந்த 'ஆ திவசம்' இவர் இயக்கிய முதல் படமாகும். இந்நிலையில், அரோமா மணியின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.