கையில் கட்டுடன் வீடியோ போட்ட வரலட்சுமி - ரசிகர்கள் அதிர்ச்சி


Varalakshmi posts video - fans shocked
x
தினத்தந்தி 16 March 2025 3:57 AM (Updated: 16 March 2025 4:40 AM)
t-max-icont-min-icon

'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் வரலட்சுமி சரத்குமார்.

சென்னை,

'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் வரலட்சுமி சரத்குமார்.தொடர்ந்து 'தாரை தப்பட்டை', 'விக்ரம் வேதா', 'சண்டக்கோழி-2', 'சர்க்கார்', 'மாரி-2', உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமி நடித்துள்ளார்.

மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த ஹனுமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இவருக்கு கடந்த ஆண்டு நிகோலய் என்பவருடன் திருமணம் நடைபெற்றநிலையில், தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கையில் கட்டுடன் வரலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

அந்த வீடியோவில் அவர் , ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது சின்ன சண்டை காட்சியில் தனது கையின் கட்டை விரலில் காயம் அடைந்திருக்கிறது எனவும் காயம் குணமடைந்தவுடன் விரைவில் படப்பிடிப்பில் இணைந்துகொள்வேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.


Next Story