அசுரன் பட நடிகரின் 'உசுரே' பர்ஸ்ட் லுக் வெளியீடு


அசுரன் பட நடிகரின் உசுரே பர்ஸ்ட் லுக் வெளியீடு
x
தினத்தந்தி 2 Jan 2025 7:55 PM IST (Updated: 2 Jan 2025 8:02 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் டீஜே அருணாச்சலம் நடித்துள்ள உசுரே படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

பாடராக அறிமுகமாகி, பல ஆல்பங்களில் நடித்து பிரபலமானவர் டீஜே அருணாச்சலம். தமிழ் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்துள்ள இவரது, முதல் படமான அசுரன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகை ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாட்டு பாடியுள்ளார், சிம்புவின், 'பத்து தல' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது, அறிமுக இயக்குநர் நவீன் டி கோபால் இயக்கியுள்ள் உசுரே படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ கிருஷ்ணா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகை ஜனனி நாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் தற்போது கூலி படத்தினை இயக்கி வருகிறார்.


Next Story