ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தின் முதல் பாடல் குறித்த புது அப்டேட்!


ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தின் முதல் பாடல் குறித்த புது அப்டேட்!
x
தினத்தந்தி 8 Sep 2024 10:12 AM GMT (Updated: 8 Sep 2024 12:13 PM GMT)

'வேட்டையன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.

அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை படக்குழு பகிர்ந்தது. ஏற்கனவே துஷாரா விஜயன் மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோர் டப்பிங் பணிகளை முடித்துவிட்டனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ' என்ற பாடலின் கிளிம்ஸ் வீடியோ இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த பதிவை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.


Next Story