கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் முதல் மலையாள படத்தின் அப்டேட்


Update on Gautham Vasudev Menons first Malayalam film
x
தினத்தந்தி 4 Dec 2024 12:26 PM IST (Updated: 4 Dec 2024 7:46 PM IST)
t-max-icont-min-icon

மம்முட்டி நடிக்கும் 'டோமினி அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்.

சென்னை,

கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் அண்மையில் வெளியான டர்போ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தையடுத்து, மம்முட்டி 'டோமினி அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் மலையாளப் படமாகும்.

இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மம்முட்டியே தயாரிக்கிறார். லீனா, சித்திக், விஜய் பாபு மற்றும் விஜி வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், மம்முட்டியின் முதல் தோற்றம் வெளியாகி வைரலானநிலையில், தற்போது இப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Next Story