'யுகாதி' திருநாள் - '12ஏ ரெயில்வே காலனி' படக்குழு வாழ்த்து


Ugadi Festival - Greetings from the team of 12A Railway Colony
x

இப்படத்தில் காமக்சி பாஸ்கர்லா கதாநாயகியாக நடிக்கிறார்.

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ். இவர் தற்போது ஒரு திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு '12ஏ ரெயில்வே காலனி' என பெயரிடப்பட்டுள்ளது. நானி காசர்கட்டா என்ற புதுமுகம் இயக்கும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்,

'பொலிமேரா வெப்தொடர் நடிகை காமக்சி பாஸ்கர்லா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சாய் குமார், விவா ஹர்ஷா, கெட்அப் ஸ்ரீனு, சதாம், ஜீவன் குமார், ககன் விஹாரி, அனிஷ் குருவில்லா மற்றும் மதுமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்

இப்படம் வருகிற கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இன்று தெலுங்கு வருட பிறப்பு(யுகாதி) தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு '12ஏ ரெயில்வே காலனி' படக்குழு வாழ்த்து கூறியுள்ளது.


Next Story