உலக சாதனை படைத்த திரிஷாவின் படம்


உலக சாதனை படைத்த திரிஷாவின் படம்
x

தெலுங்கில் திரிவிக்ரம் இயக்கத்தில் திரிஷா நடித்த 'அத்தடு' படம் உலக சாதனை படைத்துள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர் 2002-ல் வெளியான 'மவுனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். கதாநாயகியாக அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்தும் தமிழ் சினிமாவில் இவருக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது தக் லைப், குட் பேட் அக்லி, விஸ்வம்பரா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிசியாக நடித்து வருபவர் திரிஷா. இந்தநிலையில், நடிகை திரிஷா நடித்த தெலுங்கு படம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. அதுவும் தொலைக்காட்சியில் அதிக முறை ஒளிபரப்பான படம் என்கிற சாதனையை அப்படம் படைத்துள்ளது. அதாவது, திரிஷா தெலுங்கில் நடித்த 'அத்தடு' என்ற படம் இதுவரை தொலைக்காட்சியில் 1,500 முறை ஒளிபரப்பாகி உள்ளதாம். உலகளவில் எந்த படமும் இத்தனை முறை ஒளிபரப்பப்பட்டது இல்லையாம்.

திரிவிக்ரம் இயக்கிய இப்படத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக திரிஷா நடித்து இருந்தார். பிரகாஷ்ராஜ், சோனு சூட், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'அத்தடு' படம் தொலைக்காட்சிகளில் அதிகமுறை ஒளிபரப்பான படம் என்ற உலக சாதனையை நிகழ்த்தி இருப்பதை திரிஷா ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.


Next Story