தள்ளிப்போன ஸ்ரீலீலாவின் 'ராபின்ஹுட்' பட டிரெய்லர்


Trailer of Sreeleelas Robin Hooddelayed
x
தினத்தந்தி 22 March 2025 7:12 AM IST (Updated: 22 March 2025 3:28 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீலீலா மற்றும் நிதின் இணைந்து நடித்துள்ள 'ராபின்ஹுட்' படம் வருகிற 28-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் 'ஒன் மோர் டைம்' மற்றும் 'வாட்டெவர் யூ கோ' என்ற பாடல்கள் சமீபத்தில் வெளியானது. அதனைத்தொடர்ந்து, இப்படத்தின் 3-வது பாடலான 'அதிதா சர்ப்ரைஸ்' பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த சிறப்பு பாடலுக்கு பிரபல நடிகை கெட்டிகா ஷர்மா நடனமாடி இருந்தார்.

இதற்கிடையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், "எதிர்பாராத சூழ்நிலைகள்" மற்றும் "தொழில்நுட்ப சிக்கல்கள்" காரணமாக, டிரெய்லர் வெளியாகாது என்று படக்குழு தெரிவித்தது. மேலும், எதிர்பாராதவிதமாக தள்ளிப்போன இந்த டிரெயல்ர் நாளை நடைபெறும் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story