'விடாமுயற்சி' படத்தின் டிரெய்லர் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

இந்தப் படம் சுமார் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வருகிற 6-ம் தேதி வெளியாகவுள்ளது.
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் சுமார் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வருகிற 6-ம் தேதி வெளியாகவுள்ளது. விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், டிரெய்லர் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story