"தக் லைப்" படக்குழு ஹோலி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியீடு


தக் லைப் படக்குழு ஹோலி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியீடு
x

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக் லைப்’ படம் வருகிற ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் அலி பசல் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

தற்போது ஹோலி பண்டிகைக்கு வாழ்த்துத் தெரிவித்து படக்குழுவினர் சிறிய கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். மணிரத்னம் படங்களில் பெரும்பாலும் ஹோலி பண்டிகை சார்ந்த காட்சிகள் அல்லது பாடல்கள் இடம்பெறுவது வழக்கம். இந்தப் படத்தின் வீடியோவிலும் சிம்பு ஹோலி பண்டிகையில் ஆடுவதைப் போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story