இந்த ஆண்டின் முதல் ரூ. 500 கோடி படம்... சாதனை படைக்குமா சாவா?


This years first Rs. 500 crore film...
x

'சாவா' படம் ரூ. 472 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை,

மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'சாவா'. சிவாஜியின் மறைவைத் தொடர்ந்து சம்பாஜியின் மராட்டிய படைக்கும் முகலாயப் படைக்கும் இடையே நடக்கும் போராக இப்படத்தின் கதை உருவாகியிருந்தது. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் கடந்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போதுவரை இப்படம் ரூ. 472 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் ரூ.500 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வசூலிக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு வெளியாகி ரூ. 500 கோடி வசூலித்த முதல் படம் என்ற சாதனையை 'சாவா' படைக்கும்.


Next Story