காமராஜர் வாழ்க்கை வரலாறு பட இயக்குனர் இயக்கும் 'திருக்குறள்'
இளையராஜாவின் இசை மற்றும் பாடல் வரிகளில் இப்படம் உருவாகியுள்ளது.
சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி 2004-ல் வெளியானது. இதனை ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகமுன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் 'திருக்குறள்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழனும், வாசுகியாக தனலட்சுமியும் நடிக்கின்றனர். கடும் விரதம் இருந்து தனலட்சுமி இப்படத்தில் நடித்து இருக்கிறார்.
இளையராஜா இப்படத்திற்கு இசை மற்றும் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குனர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Related Tags :
Next Story